தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் செல்வ சுதாகர்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வ சுதாகர் வடவற்றில் குளிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் செல்வ சுதாகரை தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலாததால் செல்வசுதாகரை தேடும் பணி கைவிடப்பட்டது.
நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வ சுதாகரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.