Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தண்டுக்கீரை விதையை பற்றி தெரியுமா…? அதை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா… வாங்க பாக்கலாம்..!!

சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை நாம் கேள்விப் பட்டிருப்போம். அந்த தானியத்தை போலவே நாம் இப்போது பார்க்கப் தானியமும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. அதன் நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம்.

தண்டுக் கீரையை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் தண்டு கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியம் போன்று இருக்கும். இதனை அமர்நாத் என்று அழைப்பர். இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து இதில் இருப்பதால் செரிமான அமைப்பை மேம்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

கூந்தலை வலிமைப்படுத்தி உதிராமல் காக்க உதவுகிறது. இதனை கடைந்து தேர்ந்தெடுக்கும் பாலில் அதிகமான கால்சியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. 100 கிராம் அமர்நாத் விதையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கலோரிகள் 371

மொத்த கொழுப்பு 7 கிராம்

சோடியம் 4 மி கி

பொட்டாசியம் 508 மி. கி

மொத்த கார்போஹைட்ரேட் 65கி

புரோட்டீன் 14 கி

விட்டமின் மற்றும் தாதுக்கள்

விட்டமின் பி6 9%

விட்டமின் ஈ 2%

இரும்புச் சத்து 27%

மக்னீசியம் 19%

பாஸ்பரஸ் 15%

மாங்கனீஸ் 43%

காப்பர் 8%

கால்சியம் 0.15

விட்டமின் சி 7%

இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மாரடைப்பை தடுப்பதற்கு உதவுகிறது. கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நீரழிவு, கண் ஆரோக்கியம் மேம்பட இதனை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |