திடீரென ரயில்வே கேட் உடைந்த விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினம் தோறும் சில ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென ரயில்வே கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் கேட்டை கடந்து சென்ற பிறகு ஊழியர்கள் மீண்டும் கேட்டை சரி செய்துள்ளனர். மேலும் இந்த கேட்டை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.