தண்டவாளத்தில் யானை நின்றதால் சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை 2 15 மணியளவில் தென்மலையில் இருந்து எடமன் செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் யானை ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி ஹாரனை ஒலிக்க செய்தார். இதனை கேட்டதும் அந்த யானை தண்டவாளத்தில் இருந்து இறங்கி காட்டு பகுதிக்கு சென்றது. இதனால் சுமார் 5 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.