மாநிலத்தில் தனித்தனியே இயங்கும் தணிக்கை முகமைகளை கண்காணிப்பதற்கு தனி அதிகாரியை நியமிக்கும் உத்தரவை நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சென்ற வருடம் ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அடிப்படையிலான உத்தரவை நிதித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி நிதித்தணிக்கை, கூட்டுறவுத்துறை தணிக்கை, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை, மாநில அரசின் தணிக்கை, இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை மற்றும் இதர தணிக்கைப் பிரிவுகள் அனைத்தும் அரசின் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தணிக்கைப் பிரிவுகளைக் கண்காணிப்பதற்கு தணிக்கைத் தலைவா் நியமிக்கப்படுகிறாா். இத்தலைவருக்கு உதவிடும் அடிப்படையில் சிறப்பு இயக்குநா் நியமிக்கப்படவுள்ளாா். அவ்வாறு தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவா், இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் (ஐஏஏஎஸ்) பதவியைச் சோ்ந்தவராகவோ (அல்லது) இந்திய ஆட்சிப் பணியைச் சோ்ந்தவராகவோ இருப்பாா் என்று தன் உத்தரவில் நிதித்துறை தெரிவித்துள்ளது.