விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே கணபதி ராஜு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி என்பவர் வெள்ளைச்சாமியின் தோட்டத்திலிருந்து செடியில் உள்ள கொள்ளுவை எடுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது.
இதில் கணபதிராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் வெள்ளைச்சாமியை கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயடைந்த வெள்ளைச்சாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.