Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. டிரைவர் கைது….

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருவெற்றியூர் விலக்கு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் சுப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் கார் மற்றும் உள்ளே இருந்த 92 பார்சல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |