Categories
தேசிய செய்திகள்

“தடையோ தடை”…. நாடு முழுவதும் எங்கெல்லாம் எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜனவரி 31-ம் தேதி வரை பூங்காவை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதனைப்போலவே கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகரில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல மாநகராட்சி தடை விதித்துள்ளது. வடலூர் சத்திய ஞான சபை தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஹரியானா மாநிலத்தில் 15 முதல் 18 வயது சிறார்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பேரணிகள் மற்றும் பாத யாத்திரைகள், தேர்தல் பிரசார சாலையோர கூட்டங்களை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அடுத்த சனிக்கிழமை வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நைஸ் ரோட்டில் இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |