Categories
அரசியல்

தடையை மீறி வேல் யாத்திரை…. குவிந்த 500க்கும் மேற்பட்ட பொலீஸ்…. 762 பேர் கைது….!!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்றதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வேல் யாத்திரைக்கு கையில் மத்திய அரசின் திட்டங்களில் திட்டங்கள் அடங்கிய அட்டைகளையும் கட்சிக் கொடிகளையும் ஏந்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பங்கேற்றனர்.

யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாததால் 500க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டம் முடிந்த பிறகு வேல் யாத்திரை புறப்பட்ட பாஜக மாநில தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். 762 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |