டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அங்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் கூறியதாவது: சதார் பஜார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் இரண்டு நபர்களின் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது இருவரிடமும் பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், டெல்லியில் உள்ள சதார் பஜார் பகுதியில் சில்லறை விற்பனையாளர்களிடம் பட்டாசுகளை விற்பனை செய்ய வந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து 500 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.