Categories
உலக செய்திகள்

தடைபட்ட ஆக்சிஜன்…. 6 பேர் உயிரிழப்பு…. பொறுப்பேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

ஜோர்டான் மருத்துவமனையில் ஆக்சிஜன் தடைப்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டானில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரை அந்நாட்டில் 3,85, 533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,174 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் அங்கு 8,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை தோறும் ஊரடங்கை  அமல்படுத்தி அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  நோயாளிகளுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆக்சிஜன் தடைப்பட்ட காரணத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து மரணமடைந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தடை பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஜோர்டான் மன்னர் அப்துல்லா உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் இச்சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இன்று பதவி விலகியுள்ளார்.

Categories

Tech |