தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்றவற்றை பாரில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை புரசைவாக்கத்திலுள்ள பிரிக்ளின் சாலையில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கான பார் செயல்பட்டு வந்துள்ளது.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த கட்டிடத்தில் தமிழக அரசால் தடை செய்ப்பட்ட குட்கா , புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பனை செய்து வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அந்த பாரில் அவர்கள் பயன்படுத்திய போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போதை பொருளை பயன்படுத்திய அந்த 4நபர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு அந்த பாரின் உரிமையாளரான பிராட்வேயை சேர்ந்த பெரோஸ் என்ற நபரை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.