நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக இருப்பதன் காரணமாக மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி பணியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பு செலுத்தும்படி டெல்லி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி மே மாதம் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் இந்த மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளவேண்டும். ஆனால் போதிய அளவு தடுப்பூசி இல்லை மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி கிடைப்பதில்லை. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு தாமதமாகும் சூழல் நிலவியுள்ளது.