புதுவை கோனேரிகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தாத ஒருவரை அழைத்தபோது, அவர் வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாக கூறினார். ஆனால் அவரை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அழைத்ததற்கு, அவர் கையில் இருந்த அரிவாளால் மரத்தை வெட்டுவது போல் நாடகம் நடத்தியுள்ளார்.
இருந்தபோதிலும் செவிலியர் அவரை கட்டாயப்படுத்திய போது வேண்டுமானால் மரத்தில் ஏறி வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என அடம் பிடித்துள்ளார். வேறு வழியில்லாமல் செவிலியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் இந்த சம்பவம் மிகவும் வேடிக்கையாக இருந்துள்ளது.