செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் Mathew W. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொரோனோவிற்கு எதிரான தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின் வழக்கமாக அனைவரும் செய்வது போல சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மாலை Mathewக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் 26 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொற்றுநோய் நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் ராமஸ் கூறியதாவது, இது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மேலும் இது எதிர்பாராதது என்று கூற முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில் Mathewக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பே தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளதாவது, தடுப்பூசி போடப்பட்ட பின்பும் வைரஸிற்கு எதிரான ஆன்ட்டிபயாட்டிக் உடலில் ஏற்பட சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் எனவே அதுவரை நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். எனவே மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு இனிமேல் சுதந்திரமாக செயல்படலாம் என்று நினைப்பது தவறு என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.