தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் (27) நேற்று முன்தினம் கோவிஷில்டு தடுப்பூசி போட்டுள்ளார். நேற்று திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரை வியாதி இருந்து ஆறு மாதமாக சிகிச்சை பெறாமல் இருந்துள்ள அவருக்கு வேறு எந்த இணைய நோய்களும் இல்லை. மது, புகைப் பழக்கமும் இல்லாத அவரின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.