Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டே ஆகணும்… ஒட்டகத்தில் வலம் வந்த சுகாதார பணியாளர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களை வீடுவீடாகச் தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இராஜஸ்தான் பார்மரில் நல்வாழ்வு துறையைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் ஒட்டகத்தின் மீது ஏறி தடுப்பு மருந்து பெட்டியை எடுத்துச் சென்று தடுப்பூசி செலுத்தினார். இந்த புகைப்படத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சுகாதார பணியாளரின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |