மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்லாத 18வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து மண்டபம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தாமரை செல்வி, ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம்,ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல் ஆகியோர் உடனிருந்துள்ளனர். மேலும் தேவிபட்டிணம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்காக ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ஹமீதிய ராணி ஜாகிர் உசேன் செய்துள்ளார்.