Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிமே ஜாலி தான்!”.. ஜெர்மனில் புதிய சட்டம்.. மக்கள் உற்சாகம்..!!

ஜெர்மனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விதமாக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் இனிமேல் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையில்லை.

இதுமட்டுமல்லாமல் வெளியில், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தேவையில்லை. இந்த புதிய சட்டத்திற்கு ஜெர்மனி மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நாட்டில் நேற்று சுமார் 8.6 சதவீதம் மக்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டார்கள்.

இதில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு இரண்டாம் டோஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று  Robert Koch நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |