கொரோனா நோயாளிகளுக்கு 18 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
18 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாகவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.
இதேபோல், ஓமந்தூரார் ஜிஹெச் டீன் டாக்டர் ஆர் ஜெயந்தி கூறுகையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 10 நோயாளிகளில் 8 பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. நகரத்தின் மக்கள் தொகையில் 92 சதவீத பேர் முதல் டோசும் 72 சதவீத பேருக்கு இரண்டாவது டோசும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படாத அல்லது இரண்டு தடுப்பூசிகளும் போடாத நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட நோயாளிகளுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன என மருத்துவர்கள் கூறினர்.