சீரம் தலைமை நிர்வாக அதிகாரி தடுப்பூசி பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்தன. தற்போது சில தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இதுபோன்று தற்செயலாக நிகழும் விபத்தை சமாளிக்க தான் இருப்பு வைத்து இருக்கிறோம். பல உற்பத்தி கட்டிடங்கள் இருப்பதால், உற்பத்தியில் எந்த இழப்பும் ஏற்படாது என அனைத்து அரசுகளுக்கும் மக்களுக்கும் உறுதி அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.