தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் இந்த முயற்சியால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.