கொரோனா தடுப்பூசியில் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் Pfizer மற்றும் BioNtech நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி இந்த வாரம் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மருத்துவ பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியில் எந்தவித கடுமையான பக்க விளைவுகளும் கிடையாது என்று BioNtech நிறுவனத்தின் நிறுவனரும், நோயெதிர்ப்பு நிபுணரின் பேராசிரியருமான ugar Sahin தெரிவித்துள்ளார். இதில் சில லேசான பக்க விளைவுகளான, ஊசி போட்ட சில நாட்களுக்கு அந்த இடத்தில் லேசான வலி, மேலும் 12 நாட்களுக்கு லேசான காய்ச்சல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே தடுப்பூசி குறித்த ஆய்வை நிறுத்தும் அளவிற்கு எந்தவிதமான தீவிர பக்க விளைவுகளும் இதில் கிடையாது. இது முற்றிலும் தீங்கு விளைவிப்பதாக இல்லை என்றும், மேலும் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் போகப் போக குறையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இந்த தடுப்பூசிகளை இணைப்பதற்கான யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.