தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடியில் புதிய நியாய விலை கடையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் 97% குடும்ப அட்டைதாரர்கள் பயமின்றி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.