Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு மட்டும்… இனி மது விற்பனை… டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திகொள்ளும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் புதிய நடைமுறையாக கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு  மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜா கூறியுள்ளார். இதுகுறித்த நோட்டிஸ்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளில் ஒட்டப்படும் என்றும் கடைகளையும், அதன் சுற்றுப்புறத்தையும் மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |