Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி இல்லை…. ஐசியூ இல்லை…. ஆக்சிஜன் இல்லை…. ராகுல் காந்தி கடும் விமர்சனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ரூ. 3,408 கோடி மதிப்பீட்டில் 3 செயலகங்களை கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இதுகுறித்து ராகுல் காந்தி, “கொரோனா பேராபத்தாக உள்ளது. அதற்கு பரிசோதனை இல்லை. தடுப்பூசி இல்லை. ஐசியு இல்லை. ஆக்சிஜன் இல்லை. ஆனால் எதற்கு முக்கியத்துவம் தருகிறது அரசு?” என்று டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |