Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அளிக்கப்பட்ட மறுநாளே…. 240 பேருக்கு நேர்ந்துள்ள நிலை… அதிர்ச்சி தகவல்…!!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்ரேல் நாடானது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். மேலும் இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட  அடுத்த நாளே சுமார் 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு அது உடலில் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு 8 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்று ஆய்வில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக்கொண்ட பின்பு அடுத்த 21 நாட்களில் இரண்டாவது டோஸ்  தடுப்பூசியை எடுக்கவேண்டும். பின்னர் ஒரு வாரம் கழித்துதான் நோய் எதிர்ப்பு சக்தியை 95 சதவீதம் உண்டாக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியில் இரண்டு டோஸ்களையும்  எடுத்துக் கொண்ட பின்பும் கொரோனா பாதிப்பு ஏற்பட 5 சதவீதம் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலில் தற்போது 240 நபர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த பின்பு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒரு மில்லியன் மக்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு ஒவ்வாமைக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக குறைவானவர்களே தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பு பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |