கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பினை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் வாங்கியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வினியோகம் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அப்போது இந்த தடுப்பூசி முடிந்தவரையில் அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ” கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் கிடையாது. இந்தத் தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.