மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று துவங்குகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு முகம் நடைபெறுகின்றது.
மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களில் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத்துறை இயக்கத்தின் நிர்வாக இயக்குனர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக் கொள்வதன் மூலமாக தகுதி வாய்ந்த அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.