கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொட்லேட்டி கிராமத்திலிருந்து இருளர் காலனி செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டை அமைந்துள்ளது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை பத்திரமாக மீட்டனர்.