Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த சுற்றுலா வேன்…. வடமாநில தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஒரு சுற்றுலா வேனில் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைபாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் இம்ரான் நாசர் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 10 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |