Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ஆம்டிரக் ரயில்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் வழியே லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி மிசவுரி நகரிலுள்ள மென்டன் என்ற பகுதியில் வந்தபொது ரயில்வே கிராசிங்கை கடந்துள்ளது. அப்பகுதியில் விளக்குகள் உள்ளிட்ட எச்சரிக்கை அம்சங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ரயிலில் மொத்தம் உள்ள 8 பெட்டிகளில் 7 பெட்டிகள் தடம் புரண்டது. மேலும் ரயிலில் இருந்த 2 பேர் மற்றும் லாரியிலிருந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர பலர் காயமடைந்துள்ளனர். அந்த ரயிலில் 243 பயணிகள் மற்றும் 12 ரயில்வே ஊழியர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு குழு மீட்பு பணிக்கு சென்றுள்ளது. அதன்பின் அவசரகால அதிகாரிகளும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |