Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை மக்கள் அதிர்ச்சி.. வெளிநாட்டிலிருந்து வந்த வாலிபருக்கு கொரோனா உறுதி..!!

 வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய  அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று அவருக்கு இருக்கிறது என்று இன்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தஞ்சை பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

Categories

Tech |