தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் தேதியான இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
தஞ்சாவூரில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!
