தசரா திருவிழாவையொட்டி அக்டோபர் 1 முதல் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருள்மிகு முத்தாரம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..
அதன்படி, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் கோவையிலிருந்து தினமும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகை முடிந்து ஊர் திரும்பிட ஏதுவாக அக்டோபர் 6 முதல் 10ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.