Categories
சினிமா தமிழ் சினிமா

தசரா கொண்டாட்டம்…. “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்”….. பிரபல நடிகை நிகழ்ச்சி….!!!

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் சமீபத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தசரா பண்டிகை கொண்டாடியது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் தானும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி துஜே மேரி கசம் நாயகி கூறியது, எங்கள் குடும்பத்தில் தசரா ஒரு முக்கியமான பண்டிகை இந்த நாளில் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். தசரா என்பது வெற்றியுடன் மட்டுமே முடிவடையும் ஒரு குறியீட்டாக நான் உணர்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ஜெனிலியா, இந்த தசராவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான உலகம் அமையவும் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |