Categories
அரசியல்

தங்க பத்திரங்களில் முதலீடு…. இதில் இவ்வளவு பலன்கள் இருக்கா?…. வியக்க வைக்கும் உண்மை….!!!!

இந்த தங்க பத்திரம் என்பதே நேரடி தங்கமாக இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயரும் போது தங்கத்தின் மதிப்பு உயரக்கூடும். அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 2.5% வட்டித் தொகையும் கிடைக்கும். தங்கம் விலை உயர்வதால் கிடைக்கும் லாபம் மட்டும் அல்லாமல் பற்றி தொகையால் கூடுதல் வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். தங்கத்தை நகை அல்லது நாணயமாக வாங்கி வைத்தால் அதனை பாதுகாப்பது பெரிய சுமையாக இருக்கும். ஆனால் தங்க பத்திரங்களில் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. நேரடி தங்கத்தை விட குறைந்த விலையில் சங்க பத்திரங்களை வாங்க முடியும்.

ஆன்லைன் மூலமாக தங்க பத்திரம் வாங்கினால் கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடியும் உங்களுக்கு உண்டு. நேரடி தங்கத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஆனால் இதற்கு எந்த ஒரு ஜி எஸ் டி யும் விதிக்கப்படாது. தங்க பத்திரங்களை பிணையாக பயன்படுத்தி கடன் வாங்கிக் கொள்ள முடியும். இதனை மத்திய அரசு விற்பனை செய்வதால் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இப்படிப்பட்ட தங்கப் பாத்திரத்தை வாங்க விரும்புவோர் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலமாக வாங்கலாம். இதுபோக பங்குச்சந்தை மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

Categories

Tech |