இந்தியாவில் பெரும்பாலானோர் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்று வருகின்றனர். ஏனெனில் நகைகளுக்கு குறைந்த அளவே வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. எனவே எளிமையான முறையில் வட்டியினை செலுத்தி, நகைகளை மீட்டு கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தங்கத்தின் மதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது தங்க நகைக்கடனை பெறும்போது சில விதிமுறைகளையும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக பெற முடியும். எனவே நகைக்கடன் பெற நினைப்பவர்கள் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்து பெற வேண்டும். மேலும் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என ஆராய்ந்து எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதம் அளிக்கப்படும் என கண்டறிந்து நகைக்கடனை பெறலாம்.
இதையடுத்து தற்போது என்பி எஃப்சிகள் என்ற நிறுவனத்தில், குறைவான அளவு வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் தங்க நகைக் கடன்களை பெறுவதற்கு 18-24 கேரட்களாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. இதற்கான வட்டி விகிதம் எல்டிவி விகிதம், கடன் காலம், கடன் தொகை உள்ளிட்ட காரணிகளை கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தங்க நகைக்கடனை 7-நாட்கள் முதல் 3-ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த வேண்டும். மேலும் தற்போது வங்கிகளில் 75% எல்டிவி வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தற்போது 60% எல்டிவி என்பது தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக இருக்கும் போது, ரூ.60,000 வரையிலான கடன் தொகையானது வழங்கப்படுகிறது.