எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கான தங்க நகை கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு யோனா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். குறைவான வட்டியில் இந்த கடனை பெறலாம். தங்கக்கட்டிகள் மீது நகைக்கடன் வழங்கப்படாது. நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சான்றுகளை கண்டிப்பாக வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியை அணுகலாம்.