விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அது போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2013ஆம் ஆண்டு கேரளாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தங்க கடத்தலில் அக்ஷரா ஈடுபட்டிருந்தார் என்றும் அவரது உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.