கர்நாடக மாநிலம் நாகசெட்டிஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த பிரஜ்வல் என்ற இளைஞர் அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கேலி கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.. உடனே பெண்ணின் சகோதரர் அந்த இளைஞரை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தவறாக ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்த கட்டையை எடுத்து இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண்ணின் சகோதரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தங்கையை கிண்டல் செய்ததால் இளைஞரை சகோதரன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.