Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன்….. 3 மாதங்களாக அரங்கேறிய சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் இதுகுறித்து கேட்டபோது உடன் பிறந்த அண்ணனை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் சிறுமியின் அண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |