தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக தங்கும் விடுதியை திறந்து வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விடுதிக்கு 3.74 கோடியும், மாணவிகளின் விடுதிக்கு 4.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தங்கும் விடுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு அமைச்சர் காந்தி நேரில் சென்று மாணவ-மாணவிகள் விடுதியில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்த விழாவின் போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நெமிலி ஒன்றிய தலைவர் வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.