புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவருக்கு போதிய பயிற்சி அளித்தால் பல்வேறு சாதனைகளை புரிவார் எனவும், தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.