நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தனது மகளின் மறைவு நாளில் நடந்தவை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அவள் பெயர் வித்யா. அவளுக்கு அந்த வியாதி இருக்கு என தெரிந்த பிறகு எந்த ஷூட்டிங் போனாலும் நான் அழைத்துச் சென்று விடுவேன். எல்லோரிடமும் நன்றாக பழகுவாள். குறிப்பாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறையில் தான் இருப்பாள். அங்கிள் அங்கிள் என்று அவரை அழைத்துக் கொண்டு இருப்பாள். அவள் இறந்த நாள் எங்களால் மறக்க முடியாது.
அப்போது சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் Balidaan பட சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. காலையில் சூட்டிங். சாப்பிட்டு சூட்டிங் கிளம்பும் முன் என் கைகளை பிடித்துக்கொண்டு போகாதீங்க அப்பா எனக் கூறினாள். அப்போது அவளை பிடித்து தூக்கினேன். அதற்குள் அவளுக்கு சிறிது நேரத்தில் வாயில் ரத்தம் வர கோயில் உள்ளிட்ட பல இடங்களுக்கு தூக்கிக் கொண்டு அலைந்தோம். என் மடியில் மறைந்தாள். அவள் தன் கண்களை மூடியவுடன் விஜய் அப்பா, வித்யா என்று ஒரு சத்தம் போட்டான். அப்போது விஜய்க்கு பத்து வயது. அதிலிருந்து இன்று வரை எந்தப் பெண் குழந்தையை பார்த்தாலும் எங்களுக்கு பிடித்து போய்விடும் என்று உருக்கமாக பேசியுள்ளார் எஸ்.ஏ.சி.