Categories
மாநில செய்திகள்

தங்கச்சியை மிரட்டி கர்ப்பமாக்கிய அண்ணன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது அந்த மாணவியை அவரது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்கை என்றும் பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானால் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர் . அதில் உடன்பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் தாயார் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |