Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை திடீர் சரிவு…… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!!

தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது.

இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விரைவில் பசுமை அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசு விலை குறைத்ததை போல இந்த ஆண்டும் தக்காளி விலை கிலோ ரூபாய் 70 குறைக்கப்படும் எனவும், இதனை கூட்டுறவு துறையின் வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை அங்காடியில் விற்பதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |