Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற லாரி விபத்து …!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து திம்பம் மழை பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனத்தால் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று திம்பம் மழை பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |