கொரோனா 4வது அலைக்கு இடையில் இப்போது குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சலானது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் இப்போது 82 நபர்களுக்கு தக்காளிகாய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. சென்ற 2020 ஆம் வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. இப்போதுவரை இந்த வைரஸ் பரவல் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை தற்போதுதான் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழ்நிலையில் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கிடையில் கேரளாவின் ஒருசில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என அழைக்கப்படும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா குறைந்துள்ள சூழ்நிலையில் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் தமிழ்நாட்டிலும் இந்த தக்காளிகாய்ச்சல் பரவுமோ என்ற பயம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் இந்த காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. ஏனெனில் அது சாதாரண வைரஸ்தான். தக்காளி மற்றும் இந்த வைரசுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு குணமான குழந்தைகளுக்கு இந்நோய் வருவதாக” அவர் தெரிவித்துள்ளார்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன..?
இது கேரளாவில் அதிகம் காணப்படும் அறியப்படாத காய்ச்சல் ஆகும். எனினும் இந்நோய் வைரஸ் காய்ச்சலா (அல்லது) சிக்குன்குனியா (அல்லது) டெங்கு காய்ச்சலால் வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில் தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கிவுள்ளனர்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் தக்காளிஅளவு சொறி வெளியேறி பின், தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம். நீரிழப்பு அறிகுறிகள் நாக்கில்உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும். சில நோயாளிகள் தங்களது உடலில் உருவாகிய தக்காளி போன்ற சொறி முதலில் புழுக்கள் வெளியேறிய கொதிப்பை உருவாக்கியது என்று தெரிவித்துள்ளனர்.
இதன் அறிகுறிகள் என்ன..?
# அதிக காய்ச்சல்
# உடல் வலி
# மூட்டுகளில் வீக்கம்
# சோர்வு
# தக்காளி வடிவில் சொறி
# கைகளின் நிறமாற்றம்
# முழங்கால்களின் நிறமாற்றம்
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை பற்றி காண்போம்
# குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
# இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான திரவங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
# குழந்தைகளை தொற்று நோயிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
# நோயாளிக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தூய்மையை பராமரிப்பது முக்கியம் ஆகும்.
# பல்வேறு சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும் என்பதனால் சரியான ஓய்வுதேவை.