Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகாத முறையில் பேசிய குடும்பத்தினர்… தாய்-மகன் செய்த காரியம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து இருப்பதாக தெரிவித்த நிலையில் மற்றொரு நபரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடனை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அருகே இருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது உள்ளே ஆதார் கார்டு மற்றும் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதனை வைத்து நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர்கள் மதுரை மாவட்டம் வையூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரது மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது மகன் பாக்கியராஜ் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் எழுதிய கடிதத்தில் பாக்கியராஜ் கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பாக்கியராஜின் தந்தை முனியாண்டியும் உயிரிழந்து விட்டதால் மாரியம்மாள் மற்றும் பாக்கியராஜ் அவரது சகோதரன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது அவரது சகோதரனின் மனைவி தன்னிடம் பாக்கியராஜ் தவறான முறையில் நடப்பதாக பொய்யான பழியை போட்டுள்ளார்.

மேலும் வீட்டில் உள்ளவர்கள் பாக்கியராஜையும் அவரது தாயரையும் தகாத வார்த்தைகளால் பேசி காயப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர்கள் தொண்டிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |